நிர்வாகிகளுக்கான அணி/குழு உருவாக்கமும் நிர்வாகமும்
Table of Contents
1. புதிய அணிகள்/குழுக்களை உருவாக்குவது எப்படி?
பயனர் நிர்வாகம் பக்கத்திற்குச் சென்று, மேல் வலதுபுறத்தில் உள்ள நீல நிற குழுக்கள் பொத்தானைக் கிளிக் செய்யுங்கள்.
அணிகளை உருவாக்க, மேல் இடது மூலையில் உள்ள புதிய அணியை உருவாக்கு பொத்தானைக் கிளிக் செய்து, அணியின் பெயரை உள்ளிட்டு, பின்னர் சரி. என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
அமைப்பு தானாகவே அணிகளை உருவாக்க வேண்டுமெனில், மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, “அணிகளை உருவாக்கு,” என்பதைத் தேர்ந்தெடுத்து, உருவாக்க விரும்பும் அணிகளின் எண்ணிக்கையை உள்ளிடுங்கள்.
2. அணி/குழுவின் பெயரை மாற்றுதல்
அணி/குழுவின் பெயரைப் பின்னர் மாற்ற, பெயருக்கு அருகில் உள்ள பென்சில் ஐகானைக் கிளிக் செய்யுங்கள்.
3. அணி/குழுவில் யார் இருக்கிறார்கள் எனப் பார்ப்பது எப்படி?
அணி/குழுவில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க, கீழ்விரிவாக்க அம்புக்குறியை (v) அழுத்துங்கள். அந்த அணி/குழுவில் உள்ள பயனர்களின் பட்டியல் தோன்றும்.
4. அணி/குழுவை நீக்குதல் அல்லது பூட்டுதல்/திறத்தல்
ஓர் அணி/குழுவை நீக்கவோ, பூட்டவோ/திறக்கவோ விரும்பினால் (அணி/குழு பூட்டப்பட்டிருந்தால் அதில் யாரும் சேர முடியாது), அதன் பெயருக்கு அருகிலுள்ள பெட்டியைத் தேர்வுசெய்து, பொருத்தமான பொத்தானைக் கிளிக் செய்யுங்கள்.
5. அமைப்புகள்
நிர்வாகியாக, நீல நிற அமைப்புகள் பொத்தானைக் கிளிக் செய்து அணி/குழு அமைப்புகளை அணுகலாம். அங்கு பின்வரும் விருப்பங்களை அமைக்கலாம்:
நிர்வாகிகள் மட்டுமே அணிகளை ஒதுக்கலாம்: இந்த அம்சம் இயக்கப்பட்டிருந்தால், நிர்வாகிகள் மட்டுமே பயனர்களை அணிகளில் சேர்க்க முடியும். பயனர்கள் தாங்களாக ஓர் அணியைத் தேர்ந்தெடுக்க முடியாது.
பயனர்கள் அணிகளை உருவாக்கலாம்: இந்த அம்சம் இயக்கப்பட்டிருந்தால், பயனர்கள் தங்களுக்கென அணிகளை உருவாக்கலாம். நிர்வாகி இந்த அம்சத்தை இயக்கிய பின், பயனர்கள் அணிகளை உருவாக்குவதற்கான விரிவான வழிமுறைகளை இங்கே காணலாம்.
அணித் தேர்வு கட்டாயம்: இந்த அம்சம் இயக்கப்பட்டிருந்தால், பயனர்கள் பதிவு செய்யும்போது ஓர் அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில், பதிவைத் தொடர முடியாது.
அணி மாற்றத்தை முடக்கு: இந்த அம்சம் இயக்கப்பட்டிருந்தால், பயனர்கள் ஓர் அணியைத் தேர்ந்தெடுத்த பிறகு வேறு அணிக்கு மாற முடியாது.
அணியின் குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை: ஓர் அணிக்குத் தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கையை நீங்கள் நிர்ணயிக்கலாம். ஓர் அணி இந்த எண்ணிக்கையை எட்டாவிட்டால், அது சவாலில் காட்டப்படாது.
அணியின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை: ஓர் அணியில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கையை நீங்கள் நிர்ணயிக்கலாம். இந்த வரம்பை எட்டியதும், மேலும் உறுப்பினர்கள் சேர முடியாது.
6. நிர்வாகிகள் பயனர்களை அணிகளில் சேர்ப்பது எப்படி?
நிர்வாகிகள் மட்டுமே பயனர்களை அணிகளில் சேர்க்க அனுமதிக்கும் அம்சத்தை இயக்கினால், பயனர்கள் தங்கள் அணிகளைத் தேர்ந்தெடுக்க முடியாது. அதற்குப் பதிலாக, நிர்வாகிகள் அவர்களை அணிகளில் சேர்க்க வேண்டும்.
இதைச் செய்ய, பயனர் நிர்வாகம் பக்கத்திற்குச் செல்லுங்கள். ஒவ்வொரு பயனருக்கும் அருகிலுள்ள அணி நெடுவரிசையில் ஒரு கீழ்விரிவாக்க மெனு உள்ளது. அதன் மூலம் அவர்களை ஓர் அணியில் சேர்க்கலாம்.
பயனர்களை அணிகளில் சீரற்ற முறையில் சேர்க்கும் பொறுப்பை அமைப்பிடமே விடவும் முடியும். இதைச் செய்ய, மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, “சீரற்ற முறையில் அணிகளை ஒதுக்கு.” என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
ஏற்கெனவே ஓர் அணியில் சேர்க்கப்பட்டுள்ள பயனர்களையும் இதில் சேர்க்க வேண்டுமா என்பதை அடுத்து நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மேலும், குறிப்பிட்ட சவாலின் பங்கேற்பாளர்களை மட்டும் அணிகளில் சேர்க்கும் விருப்பத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.
7. தனிப்பயன் குழு வகைகளை உருவாக்குதல்
அணிகள் மட்டுமல்லாமல், விரும்பினால் துறைகள், மாநிலங்கள் அல்லது மன்றங்கள் போன்ற பிற தனிப்பயன் குழுக்களையும் உருவாக்கலாம். இதைச் செய்ய, அணிகள் பொத்தானைக் கிளிக் செய்து, + வகையைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
அடுத்து, குழுவின் வகையைத் தேர்ந்தெடுங்கள். ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட குழு வகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது தனிப்பயன் குழுவை உருவாக்கலாம்.
கீழ்விரிவாக்கப் பட்டியலிலிருந்து ஒவ்வொரு குழுவையும் தேர்ந்தெடுத்து, தனித்தனியாக நிர்வகிக்கலாம். ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி அமைப்புகள் உள்ளன.
அணிகளை உருவாக்குவதில் அல்லது நிர்வகிப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், நேரடியாக எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.